நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஸ இன்றைய தினம் குற்ற விசாரணை திணைக்களத்தில் முன்னியாக உள்ளாதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்க காலத்தில் சிரிலிய அமைப்பிற்காக அரச வாகனங்களை பயன்படுத்தியமை தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளவே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 27ஆம் திகதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவி குற்ற விசாரணை திணைனக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
எனினும் அவர் பிரிதொரு தினத்தை கோரியிருந்ததன் படி, இன்று அழைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவின் மகன் யோசித ராஜபக்ஸவும் இன்றையதினம் குற்ற விசாரணை பிரிவில் முன்னிலையாகவுள்ளார்.
றகர் விளையாட்டு வீரர் வசிம் தாஜூதினின் கொலை தொடர்பான விசாரணையின் பொருட்டே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, முன்னாள் ஜனாதிபதியின் இளைய புதல்வாரன ரோஹித ராஜபக்ஸவும் நாளையதினம் காவல்துறையின் நிதிமோசடி குறித்த விசாரணை பிரிவில் முன்னிலையாகவுள்ளதாகவும் நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அரசாங்க காலத்தில் சீனாவில் ஏவப்பட்ட சுப்ரீம் செட் வன் செயற்கை கோள் திட்;டம் தொடர்பில் வாக்கு மூலம் அளிக்கவே அவர் இன்று அழைக்கப்பட்டுள்ளார்.