தமக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ளதாக கூறப்படும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முகங்கொடுக்க தயார் என மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
உள்ளுராட்சி மன்ற தேர்தல்களை விரைவில் நடத்துவதற்காக ஏற்பாடுகள் தற்போது நாடாளுமன்றத்திடமே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.