புனர்வாழ்வின்போது முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டது எனக் கூறப்படும் குற்றச்சாட்டை, அரச மருத்துவர்களைக் கொண்டு பரிசோதனை செய்யவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ.
ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது, போர் நிறைவடைந்தபின்னர் 11ஆயிரம் முன்னாள் போராளிகளுக்கு நாம் புனர்வாழ்வு அளித்துள்ளோம். நாம் ஒன்றையும் மறைக்கவில்லை.
வெகு விரைவில் விடுதலையான முன்னாள் போராளிகளுக்கு அரசாங்கம் மருத்துவர்களைக் கொண்டு பரிசோதனை நடாத்தவேண்டும்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கவனத்தை பெறவதற்காக பரப்பப்படும் பிந்திய பொய்யே இது எனவும் தெரிவித்துள்ளார்.