ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் ஜப்பான் வீரர் சாதனை வெற்றி

313 0

201608120857176676_Japan-player-kohei-uchimura-record-gymnastics-competition_SECVPFஆண்களுக்கான ஆர்டிஸ்டிக்ஸ் ஜிம்னாஸ்டிக்ஸ் தனிநபர் போட்டியில் பங்கேற்ற ஜப்பான் வீரர் கோஹி உச்சிமுரா 92.365 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.

ஒலிம்பிக் போட்டியில் நேற்று நடந்த ஆண்களுக்கான ஆர்டிஸ்டிக்ஸ் ஜிம்னாஸ்டிக்ஸ் தனிநபர் போட்டியில் பங்கேற்ற 27 வயதான ஜப்பான் வீரர் கோஹி உச்சிமுரா அந்தரத்தில் பல்வேறு சாகசங்களை அபாரமாக செய்து காட்டி அனைவரையும் அசத்தினார்.

இதன் மூலம் அவர் ஒட்டு மொத்தத்தில் (ஆல்-ரவுண்ட்) 92.365 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். இதன் மூலம் 44 ஆண்டுகளில் ஜிம்னாஸ்டிக்ஸ் ஆல்-ரவுண்ட்டில் தொடர்ந்து இரண்டு ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

2012-ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியிலும் உச்சிமுரா இந்த பிரிவில் தங்கப்பதக்கம் கைப்பற்றி இருந்தார். சில தினங்களுக்கு முன்பு நடந்த ஆண்கள் அணிகள் பிரிவிலும் உச்சிமுரா தங்கப்பதக்கம் பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.