வேலூரில் வெயில் அளவு 100 டிகிரியை எட்டியது

336 0

201608121043142537_Vellore-reached-100-degrees-in-the-summer_SECVPFவேலூரில் வெயில் அளவு 100 டிகிரியை எட்டியது. வெயில் கொடுமையால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.வேலூரில் வெயில் அளவு 100 டிகிரியை எட்டியது. வெயில் கொடுமையால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
வெயிலுக்கு பேர் போன வேலூரில் கடந்த மாத கடைசியில் தொடர்ச்சியாக மழை பெய்தது. இதனால் வேலூர் மக்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். வெயிலின் கொடுமை குறைந்து மழை பெய்தால் வேலூரில் இதமான கால நிலை காணப்பட்டது.

ஆனால் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்தது. அவ்வப்போது மேக மூட்டம் சூழ்ந்தாலும் மழை பெய்யாமல் போனது. சில நேரங்களில் லேசான தூரல் மட்டுமே பெய்தது.

இதனால் வெட்கையின் தாக்கம் மேலும் அதிகரித்து மக்களை வாட்டியது. நாளுக்கு நாள் அதிகரித்து வந்த வெயில் அளவு கடந்த வாரம் முதல் 90 டிகிரியை தாண்டி கொளுத்தி வருகிறது.

கடந்த 8-ந் தேதி 99 டிகிரியும், 9-ந் தேதி 98.6 டிகிரியும், 10-ந் தேதி 99.5 டிகிரியும் வெயில் அடித்தது. நேற்று வெயில் அளவு 100 டிகிரியை எட்டியது.

இந்த வெயில் காரணமாக இரவு நேரத்தில் தூங்க முடியாத அளவுக்கு வெட்கை அதிகமாக இருந்தது. இந்த வெட்கையை தாங்க முடியாமல் மக்கள் மிகவும் தவித்தனர்.

வெயிலின் தாக்கம் காரணமாக உஷ்ணம் அதிகரித்து உடலில் வியர்வை ஏற்பட்டு இரவு நேரத்தில் மக்கள் படுக்கையில் படுக்க முடியாமல் திணறினர். இதனால் அவர்கள் காற்றுக்காக நள்ளிரவு வரை வீட்டுக்கு வெளியே உலா வந்தனர்.

மழை வந்து குளிர்விக்காதா? என்று வானத்தை பார்த்து ஏங்கியவர்களும் அதிகம். ஆனால் மழைக்கான அறிகுறியே தென்படவில்லை. நேற்றும் பகலில் லேசான தூரல் மட்டும் விழுந்ததே தவிர பூமியை குளிர்விக்கும் அளவுக்கு பெய்யவில்லை.

இன்றும் காலையில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. வெயில் கொடுமையால் மக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளானார்கள். இன்றும் வெயில் அளவு 100 டிகிரியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.