யாப்பாணத்தை சீரழிக்க அனுமதிக்க முடியாது – இளஞ்செழியன்

315 0

thumb_large_neethipathiஅமைதியாக உள்ள யாழ்ப்பாணத்தை சீரழிப்பதற்கு அனுமதிக்க முடியாது என்று யாழ்ப்பாண மேல்நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் இருந்து கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 141 கிலோ கஞ்சாவை உடைமையில் வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஒருவர் தொடர்பில், பிணைக்கோரப்பட்டபோதே நீதிபதி இந்த கருத்தை வெளியிட்டார்.

யாழ்ப்பாணம் தற்சமயம் அமைதியாக உள்ளது. குற்றச் செயல்கள் குறைவடைந்து காணப்படுகின்றன.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

அதேவேளை,  தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளது. இந்தப் பரீட்சைக்காக மாணவர்கள் தம்மைத்தயார் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

அத்துடன் இலட்சக்கணக்கான மக்கள் நல்லூர் திருவிழாவு;ககாக படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர்.

நாட்டின் வெளிப் பிரதேசங்களில் இருந்து வருபவர்களும், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுமாக யாழ்ப்பாணம் விருந்தினர்களால் நிரம்பி வழிகின்றது.

இந்தச் சூழ்நிலையில் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களை பிணையில் விடுவது  ஆபத்தான நிலைமையையே ஏற்படுத்தும் என்று நீதிபதி இளஞ்செழியன் குறிப்பிட்டார்.