மிருக பலிக்கு எதிரான வழக்கு

375 0

யாழ்ப்பாண குடாநாட்டில் உள்ள கோயில்களில் மிருகப் பலிக்கு எதிராக ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி வரையில் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்திருந்த யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி அந்தத் தடையுத்தரவை வழக்கு விசாரணை முடிவடையும் வரை நீடித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண குடாநாட்டு கோயில்கள் சிலவற்றில் விலங்குகளை வெட்டி, நடத்தப்படும் வேள்விகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரி அகில இலங்கை சைவ மகாசபை மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது.

இதனை விசாரணை செய்த யாழ்ப்பாண மேல் நீதிமன்றம், கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி; இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.