நாட்டுக்கு முறையான வரி கொள்ளை ஒன்றின் தேவைப்பாடு தற்போது ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில், அரசாங்கத்திற்கு கிடைக்கப்பெறும் வரி வருமானம் குறைவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று வெட் வரி தொடர்பாக சிலர் கருத்துக்களை வெளியிடுகின்றனர்.
இந்த வெட் வரியானது 2002ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
தற்போது அரசாங்கத்தின் வரி வருமானம் மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
எனவே உரிய வரிக் கொள்கை அமுலாக்கப்பட வேண்டியது கட்டாயமானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், அரச துறையை வீழ்ச்சி போக்கிற்கும், நாட்டை கடன்சுமைக்கும் இட்டுச் சென்றவர்கள் இன்று வீரர்கள் போன்று குரல் கொடுத்து வருவதாகவும் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார்.