வடகொரியாவுடன் உரிய முறையில் நடவடிக்கைகளை எடுப்பதற்கு அமெரிக்கா தயார் நிலையில் உள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
அதற்கு ஏற்ற வகையில் அமெரிக்க இராணுவம் முழு அளவிலான தயார் நிலையில் உள்ளதாக அவர் தமது டுவிட்டர் தளத்தினூடாக தெரிவித்துள்ளார்.
வடகொரியா தமது தற்போதைய நிலைப்பாட்டில் மாற்றத்தை கொண்டுவராவிட்டால் கொரிய குடாவில் அணு ஆயுத யுத்தம் தவிர்க்க முடியாதுபோகலாம் என அவர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க குவாம் புரயஅ நிலப்பரப்பை நோக்கி, ஏவுகணை தாக்குதலை மேற்கொள்ள திட்டமுள்ளதாக வட கொரிய அண்மையில் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், குறித்த பிராந்தியத்திலுள்ள மக்களுக்கு ஏவுகணை அச்சுறுத்தல் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.