அமெரிக்காவில் இந்திய வம்சாவளி தொழில் அதிபர் விசா மோசடி

243 0

அமெரிக்காவில் விசா மோடி வழக்கில் இந்திய வம்சாவளி தொழில் அதிபர் சக்சேனாவுக்கு 40 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.

அமெரிக்காவில் ஹேம்ப்ஷயரில் வசித்து வருபவர் ரோகித் சக்சேனா (வயது 42). இந்திய வம்சாவளி தொழில் அதிபர். இவர், அங்குள்ள மான்சென்ஸ்டர் நகரில் சாக்ஸ் ஐ.டி.குரூப் எல்.எல்.சி., என்ற நிறுவனத்தின் தலைவராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உள்ளார்.

இவரது நிறுவனம், கலிபோர்னியாவில் உள்ள ஒரு கம்பெனிக்கு வெளிநாட்டு பணியாளர்களை அமர்த்தி தருவதாக கூறி, 45 போலி ‘எச்-1பி’ விசா விண்ணப்பங்களை அளித்துள்ளது. ஆனால் அந்த கலிபோர்னியா கம்பெனியுடன் ரோகித் சக்சேனாவின் நிறுவனம் எந்தவொரு உடன்பாடும் செய்து கொள்ள வில்லை என தெரிய வந்தது. எனவே போலியான விண்ணப்பங்களை அளித்து ரோகிச் சக்சேனா மோசடியில் ஈடுபட்டுள்ளதை அமெரிக்க அரசு கண்டுபிடித்து விட்டது.

இது தொடர்பாக அவர் மீது அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின்போது அவர் தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவருக்கு 40 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.26 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 3 ஆண்டுகள் அவர் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டிருப்பார்.

இதேபோன்று அமெரிக்காவில் மேரிலாந்து மாகாண அரசு ஒன்றில் ஊழியராக உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த அனுஜ் சுத் என்பவர் லஞ்ச வழக்கில் சிக்கி உள்ளார்.

Leave a comment