இலங்கையின் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டால், அதற்கு ஆதரவளிப்பதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
கம்பஹாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
விஜேதாஸ ராஜபக்ஷ இதற்குள் போராட வேண்டுமாயின் அவர் அதைச் செய்ய வேண்டும் என மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ முன்வைத்த சட்டமூலம் மற்றும் பிரேரணை என்பன சபை முதல்வாரன அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவால் நாடாளுமன்ற ஒழுங்கு பத்திரத்திலிருந்து நேற்று விலக்கிக்கொள்ளப்பட்டது.
குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை விசேட ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதியை அங்கீகரிப்பதற்கான பிரேரணை என்பனவே சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்லவால் விலக்கிக்கொள்ளப்பட்டது.