ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களமும், கையூட்டல் விசாரணைப் பிரிவும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை உடன் முன்னெடுக்க வேண்டும் என ஜே. வி. பியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
ரவி கருணாநாயக்கவை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என அமைச்சர்கள் பலர் குறிப்பிட்டுள்ளனர்.
நாடாளுமன்றில் நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டதன் பின்னரே ரவி கருணாநாயக்க பதவி விலகினார்.
இது சிறந்த அரசொன்றுக்கான அடிப்படை அம்சம் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, மத்திய வங்கியின் பிணைமுறி தொடர்பாக விசாணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழுவின் பணிகள் ஒருபோதும் முடக்கப்படக் கூடாது என்றும் அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.