இலங்கையின் பொது போக்குவரத்து சேவைகள் மற்றும் பிரத்தியேக ஒழுங்கை முறைமைகளை கொழும்பு நகரை அண்மித்த பகுதிகளில் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் 15ஆம் திகதி முதல் கொழும்பு நகரில் கட்டங் கட்டமாக வீதி ஒழுங்கை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.