ரஷ்ய தம்பதியினரை விபத்துக்குள்ளாக்கி தப்பிச் சென்ற பேரூந்து சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி மாத்தறை பிரதான வீதியின் மிரிஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ரஷ்ய தம்பதியினர் உயிரழந்தனர்.
குறித்த பேரூந்து ரஷ்ய தம்பதிகள் பயணித்த உந்துருளியுடன் மோதுண்ட நிலையிலே இந்த அனர்த்தம் இடம்பெற்றதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய பேரூந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த ரஷ்ய தம்பதியினரின் உடலங்கள் மாத்தறை மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.