
இந்த நிலையில், டெல்லி ஜனாதிபதி மாளிகையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள ராம்நாத் கோவிந்தை, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இதுதொடர்பாக மம்தா பானர்ஜி டுவிட்டரில் பதிவிடுகையில், ‘ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்து, எனது இதயம் கலந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டேன்.
இது ஒரு அற்புதமான சந்திப்பாக அமைந்தது. விரைவில் கொல்கத்தாவுக்கு வருகை தரவேண்டும் என ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தேன்’ என குறிப்பிட்டுள்ளார்.