இலங்கைப் பணியாளர்களுக்கு தென்கொரியாவில் அதிக தொழில்வாய்ப்பு

273 0

கடந்த இரண்டு வருடங்களில் வரலாற்றில் அதிகளவு இலங்கைப் பணியாளர் தென்கொரிய சென்றுள்ளதாக அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

இதற்கமைய கடந்த 2015 இல் 5006 பேரும்,கடந்த வருடம் இது 1529 ஆக அதிகரித்துள்ளதுடன்,இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 2134 இலங்கைப் பணியாளர்கள்  தென்கொரியாவுக்கு சென்றுள்ளதாகவும்,அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் நாட்டிற்கு தொழில்வாய்ப்பு பெற்றச் செல்லும் 19 பேருக்கு விமானசீட்டுக்களை வழங்கி வைத்து உரையாடும் போதே அமைச்சர் தலதா இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கைப் பணியாளர்களுக்கு தென்கொரியாவிற்குள் நல்ல தொழில்வாய்ப்பு கிடைப்பதாகவும்,எனவே அங்கு செல்பவர்கள் தமது கடமைகளையும்,பொறுப்புக்களையும் சரியான முறையில் நிறைவேற்றுவதுடன்,பதவிக்காலம் முடிவடைந்தவுடன் மீண்டும் நாட்டுக்கு திரும்புவது அவசியம் என்றும் அமைச்சர் தலதா தெரிவித்துள்ளார்.

மேலும் தென்கொரியாவில் தற்போது பொதுமன்னிப்பு காலம் நிலவுவதாகவும்,எனவே அங்கு சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கைப் பணியாளர்கள் நாடு திரும்புவதற்கு சிறந்த சந்தர்ப்பம் உருவாகியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment