இந்தியாவின் வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் விரைவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இலங்கை – இந்திய பொருளாதார தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை குறித்து கலந்துரையாடும் முகமாக அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே இந்தியாவின் விசேட குழு ஒன்று இலங்கைக்கு விஜயம் செய்து, எட்கா உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தைகளை கடந்த இரண்டு தினங்களில் நடத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.