இலங்கையுடனான ராஜதந்திர உறவுகள் கடுமையான காலத்தை கடந்து மீண்டு வந்திருப்பதாக சீனாவின் இலங்கைக்கான தூதுவர் ஈ சியாங்லியாங் தெரிவித்துள்ளார்.சபாநாயர் கரு ஜெயசூரியவை சந்தித்து அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் வரலாற்று ரீதியாக நீண்டாகல உறவு காணப்படுகிறது.எனினும் இந்த உறவு கடந்த ஒரு வருட காலமாக கடுமையான காலத்தை சந்தித்திருந்தது.
தற்போது இந்த நிலைமையில் இருந்து மீண்டிருப்பதன் ஊடாக, இரண்டு தரப்புக்கும் நன்மைகள் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.