தற்போது இலங்கையின் தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டுள்ள நோர்வேயின் பிரதமர், நாளையும் நாளைமறுதினமும் இலங்கையின் அரச நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.
இதன்படி அவர் ஜனாதிபதி செயலகத்துக்கு நாளையதினம் செல்லவுள்ளார்.
இதன்போது அவருக்கு பூரண மரியாதை வழங்கப்படும்.
இதன்பின்னர் அவர் ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் சந்திப்பில் ஈடுபடுவார் என்று வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.
இதனையடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் ஆர் சம்பந்தன் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரும் நோர்வே பிரதமரை சந்திக்கவுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து நாளை வெள்ளிக்கிழமை மாலை நோர்வேயின் பிரதமர், லக்ஸ்மன் கதிர்காமம் நிறுவகத்தில் விரிவுரை ஒன்றை ஆற்றவுள்ளார்.
எதிர்வரும் சனிக்கிழமையன்று மிரிஸ்ஸவில் அமைக்கப்படும் மீன்பிடித்துறைமுகத்தை பார்வையிடுவதுடன் காலி கோட்டைக்கும் விஜயம் செய்யவுள்ளார்.