முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டு அங்கு நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டுள்ளார்.தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான செயலணியினால் வடமாகாணத்தில் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள் தொடர்பாக ஆராய்வதற்காகவே அவர் அங்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இவ்விஜயத்தின் போது யாழ்.மாவட்டச் செயலகத்தில் உள்ள மாநாட்டு மண்டபத்தில் வடமாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள் ஆகியோரையும் அழைத்து எதிர்கால திட்டங்கள் தொடர்பாக ஆராய்வுபகளை மேற்கொண்டுள்ளார்.
இதன் போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன், யாழ்.இந்திய துணைத்தூதுவர் என்.நடராஜன், சிறுவர் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.