ஆசியாவின் மிகப்பெரிய இரும்பு தாதுப்படிவு மொனராகலையில் கண்டுபிடிப்பு!

407 0

ஆசிய வலயத்தில் மிகப்பெரிய இரும்புத் தாதுப்படிவு இலங்கையின் மொனராகலை மாவட்டத்தின் புத்தல பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக இலங்கை புவியியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தக் கனிமப் படிவு சுமார் 64 சதுர கிலோ மீற்றர்கள் வரை வியாபித்திருப்பதாகவும், அதிலிருந்து கிட்டத்தட்ட ஒன்பது மில்லியன் தொன் இரும்புக் கனிமத்தைப் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் இந்த ஆராய்ச்சிக்குப் பொறுப்பாகவுள்ள புவியியல் பேராசிரியர் அத்துல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்தக் கனிமத்தைப் பிரித்தெடுக்க சரியான வழிகள் பின்பற்றப்பட்டால் இலங்கை வருடாந்தம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் சுமார் 60 ஆயிரம் மெட்ரிக் தொன் இரும்புக்கான பாரிய செலவை மிச்சப்படுத்தலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, இந்த இரும்புக் கனிமத்தைத் தோண்டியெடுப்பதற்காக ஒருசில உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் மேற்கொண்ட முயற்சி பிரதேசவாசிகளின் கடுமையான எதிர்ப்பால் முறியடிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசு இந்தத் திட்டத்தில் நேரடியாக ஈடுபடுவதன் மூலம் தங்களுக்கு ஏராளமான தொழில்வாய்ப்புகள் கிடைக்குமென அவர்கள் எதிர்பார்ப்பதாகத் தெரியவருகின்றது.

Leave a comment