அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக மகிந்த அணியினரால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து இன்றைய தினம் தீர்மானிப்படவுள்ளது.
இதனிடையே, அமைச்சர் ரவி கருணாநாயக்க தொடர்பில் ஜனாதிபதியின் தீர்மானம் இன்றைய தினம் அறிவிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாக சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிணைமுறி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர் ரவி கருணாநாயக்கவை பதவி விலக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் குழுவொன்று, நேற்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.