வடமாகாண அமைச்சர் டெனீஸ்வரன் தொடர்பில் எதிர்வரும் 12ஆம் திகதி தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக, டெலோ இயக்கம் அறிவித்துள்ளது.
டெலோ இயக்கத்தை பிரதிநித்துவப்படுத்தும் அமைச்சர் டெனீஸ்வரனை பதவி நீக்கி, அவருக்கு பதிலாக வேறொருவரை நியமிக்கும் தீர்மானத்தை டெலோ இயக்கம் முன்னதாக மேற்கொண்டு, முதலமைச்சருக்கு கடிதம் வழங்கி இருந்தது.
ஆனால் கட்சியின் தீர்மானத்துக்கு விரோதமாக, தாம் பதவி விலகப்போவதில்லை என்ற அறிவிப்பை நேற்று அமைச்சர் டெனீஸ்வரன் வெளியிட்டிருந்தார்.
இது தொடர்பில் டெலோ இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை வினவியபோது, அவர் இந்த தகவலை வழங்கினார்.