சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று யாழ்ப்பாணத்துக்கு பயணம்

343 0

blogger-image-1752807279-3சிறீலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

தேசிய ஒரு­மைப்­பாட்­டுக்கும் நல்­லி­ணக்­கத்­திற்­கு­மான அலு­வ­ல­கத்­தினால் ஆரம்­பிக்­கப்­பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் மழைநீர் சேக­ரிப்­ப­தற்­கான கருத்­திட்­டத்தை வடக்கு மக்கள் மத்­தியில் கொண்டுசெல்வதற்கான வேலைத்­திட்டம் நடை­பெற்­று­வ­ரு­கின்­றது.

இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஆளுநர் றெஜினோல்ட் குரே, சிறுவர் விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

தேசிய ஒரு­மைப்­பாட்­டுக்கும் நல்­லி­ணக்­கத்­திற்­கு­மான தலைவராகச் செயற்படும் சந்திரிக்கா குமாரதுங்கவும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவே யாழ்ப்பாணத்துக்கு பயணம் செய்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்நிகழ்வு இன்று பிற்பகல் 2.00 மணியளவில் வேலணை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.இந்நிகழ்வில் பொதுமக்களுக்கு நீர்த்தாங்கிகள் கையளிக்கும் நிழ்வும் நடைபெறவுள்ளது.