ஊழியர்கள் அனைவருக்கும் சம்பள பாக்கியை திருப்பி செலுத்த சவுதி மன்னர் அதிரடி உத்தரவு

316 0

201608110211437461_Pay-arrears-to-all-workers-Saudi-king-orders-companies_SECVPFசவுதியில் வேலையிழந்த தொழிலாளர்களுக்கு உடனடியாக சம்பள பாக்கியை வழங்க வேண்டும் என அந்நாட்டு மன்னர் சல்மான் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சவுதி அரேபியாவில் கடந்த சில மாதங்களாக தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வந்த வெளிநாட்டை சேர்ந்த தொழிலாளர்கள் சுமார் 2500 பேர் வேலை இழந்துள்ளனர்.

மேலும் சில நிறுவனங்களின் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வந்த இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளை சேர்ந்த 16000 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்ததால், இவர்கள் அனைவரும் அங்குள்ள முகாம்களில் தங்கவைக்கபட்டு உள்ளனர்..

சம்பள பாக்கி உள்ளதால் அவர்களால் தங்கள் சொந்த நாட்டிற்கு கூட செல்ல முடியாமல் இருந்ததை கண்ட சவுதி மன்னர் வேலையிழந்த தொழிலாளர்களுக்கு உடனடியாக சம்பள பாக்கியை வழங்க வேண்டும் என அந்நாட்டு மன்னர் சல்மான் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் தொகை செலுத்த முடியாத நிறுவனங்களுக்கு சவுதி அரசு சார்பில் 100 மில்லியன் சவுதி ரியால் கடனாகவும் கொடுத்துள்ளார்.அதை அவர்கள் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்துள்ளார்.

மேலும் நிறுவனங்களில் வேலை பார்த்து வந்த வெளிநாட்டவர்கள் சொந்த நாட்டிற்கு செல்வதற்கு சவுதி ஏர்லைன்ஸ் மூலம் அனுப்பி வைக்ககவும், அவர்கள் விருப்பப்பட்டால் Final Exit விசா கூட வழங்குமாறும் அதற்கான கட்டணத்தை அந்நிறுவனங்களே செலுத்துமாறும் உத்திரவிட்டுள்ளார்.

இவ்வாறு சவுதி மன்னர் அதிரடி உத்தரவால் வெளிநாட்டு தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்ததுடன் மன்னருக்கு நன்றியும் தெரிவித்துள்ளனர்.