புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக கிரண்பேடி பொறுப்பேற்றது முதல் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
புதுச்சேரிக்கு சுகாதாரத்துக்கான தூதுவராக செயல்பட ரஜினிக்கு கிரண்பேடி அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில் நேற்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதாவுடன் சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை கிரண்பேடி வெளியிட்டிருந்தார்.
இது தொடர்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகை தரப்பில் விசாரித்தபோது, ‘‘ஆளுநர் கிரண்பேடி சில நாட் களுக்கு முன்பாக சென்னை சென்றிருந்தார்.
அங்கு தமிழக ஆளுநர் மாளிகையில் லதாவை சந்தித்துள்ளார்.
அது தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டுள் ளார்” என்று குறிப்பிட்டனர்.