
நேற்று இரவு கொள்ளுப்பிட்டியில் வைத்து இந்த சீன நாட்டவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதன்போது இவரிடம் இருந்து 20 லீற்றர் சட்டவிரோத மதுபானமும் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்குரியவர் இன்று கோட்டை நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இதனிடையே, திருகோணமலை கிண்ணியாவில் 37 லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை கிண்ணியா பாரதிபுரத்தில் வசித்துவரும் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.