ஹெரோயினுடன் பாகிஸ்தானியர் கட்டுநாயக்கவில் கைது

10581 12
37 லட்சம் பெறுமதியான ஹெரோயினை இலங்கைக்கு கொண்டுவந்த 54 வயதான பாகிஸ்தானியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க வானூர்தி தளத்தில் வைத்து சுங்க பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாய்லாந்தின் பெங்கொக் நகரில் இருந்து நேற்று இரவு 11.20 அளவில் இலங்கை வந்த அவர், தமது பயண பொதியில் சூட்சமமான முறையில் ஹெரோயினை நாட்டுக்கு கொண்டுவந்துள்ளார்.
அவரிடம் இருந்து 376 கிராம் ஹெரோயின் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Leave a comment