இதய அறுவை சிகிச்சைக்கான மருத்துவ பொருட்களின் விலை தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல்

249 0

சில மருத்துவ உபகரணங்களுக்கான அதி கூடிய சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்ட வர்த்தமான அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். 

அதன்படி இதய அறுவை சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்ற உலோக ஸ்டென்ட்கள் மற்றும் அது கரைவதற்கான மருந்து வகைகளுக்காக இந்த கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதய அறுவை சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்ற உலோக ஸ்டென்ட்களுக்கு 24,000 ரூபா விலையும், அது கரைவதற்கான மருந்துகளுக்கு 105,000 ரூபாவும் அதிகபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave a comment