இரண்டு வாரங்களில் இந்தியா மீது போர் – சீனா

278 0

இன்னும் இரண்டு வாரங்களில் இந்தியா மீது சீனா போர்த் தொடுக்கவுள்ளதாக சீனா எச்சரித்துள்ளது.

சீனாவின் சர்வதேச நட்புறவு நிறுவனத்தின் அதிகாரியான ஹூயோங் இதனை தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக இந்தியா சீனா குறித்து பக்குமற்ற வகையில் செயற்பட்டுவருவதாக குறிப்பிட்டுள்ள அவர், பிரச்சினைகள் அற்ற இடங்களில் சிக்கல்களை உருவாக்கி வருவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த நிலையில் குறித்த பகுதியில் இருந்து இன்னும் 2 வாரத்துக்குள் இந்திய ராணுவம் வெளியேற்றப்படும் என குறிப்பிட்டுள்ள ஹூயோங், இதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சிடம் அறிவித்ததன் பின்னர் சிறிய அளவிலான போர் நடவடிக்கையை சீன ராணுவம் மேற்கொள்ளும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தாக்குதலுக்காக சீனாவின் 18 ஆயிரம் அடி உயர மலைப்பகுதியில் சீனா பீரங்கிகளை நிலைநிறுத்தியுள்ளதாக சீன அரசின் உத்தியோகபூர்வ நாளிதழான குளோபல் டைம்ஸ் செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.

இந்தியா, சீனா மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளின் எல்லை பிரதேசத்தில், எல்லை நிர்ணய உடன்படிக்கையை மீறி சீனா வீதிகளை அமைத்துவருவதாக இந்தியா குற்றம் சுமத்தியுள்ளதுடன், குறித்த எல்லைப்பகுதியில் இந்தியா இராணுவத்தினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment