இலங்கையில் இராணுவம் வேட்டையாடப்படுகின்றது – ஓய்வுபெற்ற மேஜர் குற்றச்சாட்டு

315 0

இலங்கையில் ஆளும் அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து இராணுவ வீரர்களை வேட்டையாடிவருவதாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்.

குவைட்டில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சிறுபான்மை மக்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக புதிய அரசியல் அமைப்பொன்று உருவாக்கப்படுகின்றது.

இது அபாயகரமான நிலையாகும்.

இலங்கையில் இராணுவ வேட்டை என்பது பிரபலமான பதங்களாக மாறியுள்ளது.

இராணுவத்தினர் யுத்த குற்றங்களில் ஈடுபடவுமில்லை, யுத்த குற்றங்களை செய்ய உதவி வழங்கவும் இல்லை.

யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவ வீரர்கள் பெருமளவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இராணுவத்தை சர்வதேச நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக மேஜர் கமல் குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment