இலங்கை 9.5 ட்ரில்லியன் ரூபாய் கடனில் சிக்கி இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற பிரதமர் கேள்வி நேரத்தில், ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போது அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.