ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் – இலங்கைக்கு 400 மில்லியன் டொலர் நேரடி வெளிநாட்டு முதலீடு – மத்திய வங்கியின் ஆளுனர் 

285 0
ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதனூடாக இலங்கைக்கு 400 மில்லியன் டொலர் நேரடி வெளிநாட்டு முதலீடு கிடைக்கும் என மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைக் கூறியதாக அரசாங்க இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
வறட்சியினால் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தாலும் எதிர்வரும் நவம்பர் மாதம் அளவில் பணவீக்கம் மேலும் குறைவடையும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ரூபாவின் பெறுமதி டொலருக்கு அமைவாக போட்டித் தன்மையுடன் அதிகரிப்பது அவசியமாகும்.
ஏற்றுமதியை அதிகரிப்பது பற்றி கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
உற்பத்தி, முதலீடுகள் என்பனவற்றை அதிகரித்து புதிய தொழில்வாய்ப்புக்களும் விஷ்தரிக்கப்பட வேண்டும் என்றும் மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment