நவுறு தீவில் துன்புறும் இலங்கை அகதிகள்

315 0

1429241095_1005412_hirunews_cambodiasaஇலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நவுறு தீவு அகதி முகாமில் இடம்பெறுகின்ற அகதிகள் துன்புறுத்தப்படுகின்றமை தொடர்பான 2000க்கும் அதிகமான ஆவணங்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.

பாலியல் துஸ்பிரயோகங்கள், பாலியல் லஞ்சம் கோரப்படுதல், முறைக்கேடான தொடுகை உள்ளிட்ட இம்சிப்புகள், சித்திரவதை, தட்டிக்கழித்தல், உளரீதியாக பாதிப்படைய செய்தல், அச்சுறுத்தல் போன்ற பல்வேறு துன்புறுத்தல்கள் அகதிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்றன.

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களும், ஏனைய பணியாளர்களும் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இதனை அவுஸ்திரேலிய அரசாங்கம் மறுத்துள்ளது.

தொடர்ந்து இந்த முகாமில் உள்ளவர்களுக்கு நலுக்கான நவுறு அரசாங்கத்துக்கு உதவி வழங்கவிருப்பதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் கசிந்துள்ள இந்த ஆவணங்களை பிழையானவை என்று தட்டிக்கழிக்க முடியாது என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த முகாமை நிறுவகிக்கின்ற நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகளாலேயே இந்த ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

அகதிகளால் நாளாந்தம் வழங்கப்படுகின்ற முறைப்பாடுகளே இந்த ஆவணங்களில் பதியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.