சைட்டம் நிதி முறைகேடு தொடர்பில் வௌியாகும்

248 0

சைட்டம் பிரச்சினையில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடு சம்பந்தமாக எப்போதாவது ஒருநாள் பிணைமுறி ஆணைக்குழு போன்ற ஒரு ஆணைக்குழு முன்னிலையில் வௌியாகும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் நலிந்த ஹேரத் கூறினார். 

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தமக்கு கிடைக்கின்ற வரப்பிரசாதங்களுக்கு அமைவாகவே அரசியல்வாதிகள் தமது நெருக்கடிகள் குறித்து தீர்மானிப்பதாக அவர் கூறியுள்ளார். அத்துடன் சைட்டமுடன் தொடர்புடைய அரசியல்வாதி தொடர்பில் எதிர்காலத்தில் தகவல் வௌியிடுவதாக அவர் கூறியுள்ளார்.

Leave a comment