லொத்தர் சபை தொடர்பில் சட்ட மா அதிபர் உள்ளிட்டவர்களுக்கு நோட்டீஸ்!

269 0

தேசிய மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபையை வௌிவிவகார அமைச்சின் கீழ் வழங்கியதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதிவாதிகளாக பிரதமர் ரணில் விகரமசிங்க, நிதியமைச்சர் மங்கள சமரவீர மற்றும் வௌிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். 

குறித்த லொத்தர் சபைகளை வௌிவிவகார அமைச்சின் கீழ் இயக்குவதானது அரசியலமைப்புக்கு மரணானது என்று உத்தரவிடுமாறு கோரிய மனு பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தனவினால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

புவனேக அலுவிஹார உள்ளிட்ட மூவரடங்கிய நீதிகதிகள் முன்னிலையில் குறித்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

இது சம்பந்தமாக விளக்கமளிப்பதற்கு கால அவகாசம் தேவையென்று சட்டமா அதிபர் இதன்போது கூறியுள்ளார். இதன்காரணமாக சட்ட மா அதிபர் உள்ளிட்ட தரப்பினருக்கு நோட்டீஸ் அனுப்புமாறு மூவரடங்கிய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அரசியலமைப்பின் படி தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை ஆகியன நிதியமைச்சின் கீழேயே இயங்க வேண்டும் என்று குறித்த மனுவின் மூலம் பந்துல குணவர்தன கூறியுள்ளார். விடயங்களை கவனத்திற் கொண்ட நீதிபதிகள் குழாம் குறித்த வழக்கை ஒக்டோபர் மாதம் 30ம் திகதிக்கு மீண்டும் விசாரிக்க தீர்மானித்துள்ளனர்.

Leave a comment