உலக தடகள போட்டி லண்டனில் இன்று நடக்கிறது.
மின்னல் வேக ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் இந்த போட்டியுடன் விடைபெறுகிறார்.
உலக தடகள போட்டி லண்டனில் இன்று நடக்கிறது.
மின்னல் வேக ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் இந்த போட்டியுடன் விடைபெறுகிறார்.
16வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி இன்று முதல் 13ஆம் திகதி வரை லண்டனில் நடக்கிறது.
205 நாடுகள் பங்கேற்கும் இந்த தடகள திருவிழாவில் 24 பந்தயங்கள் இடம் பெறுகின்றன.
இதில், எல்லோரது பார்வையும் உலகின் அதிவேக மனிதன் என்று அழைக்கப்படும் ஜமைக்காவின் உசேன் போல்ட் மீதே பதிந்து இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டத்தில் உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான உசேன் போல்ட், ஏராளமான சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
உலக தடகளத்தில் 11 தங்கப்பதக்கங்களை அள்ளியிருக்கும் உசேன் போல்ட் இந்த போட்டியுடன் ஓய்வு பெறுகிறார்.
தோற்கடிக்கப்படாமல் விடைபெறுவேன் என்று சூளுரைத்து இருக்கிறார்.
அவர் களம் இறங்கும் 100 மீட்டர் ஓட்டத்தின் இறுதிசுற்று நாளை நடக்கிறது.
நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரரான இங்கிலாந்தின் மோ பாரா 5 ஆயிரம் மீட்டர் மற்றும் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனாக வலம் வருகிறார்.
இந்த சீசனுடன் ஓய்வு பெற திட்டமிட்டு இருக்கும் 34 வயதான மோ பாராவுக்கு இது தான் கடைசி உலக தடகள போட்டி என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.