பெர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கசுன் பலிசேனகேவின் கையடக்க தொலைபேசி, இன்று பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அவரின் கையடக்க தொலைபேசி உள்ளிட்ட டிஜிடல் உபகரணங்களை ஆணைக்குழுவில் ஒப்படைக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்தால் உத்தரவிடப்பட்டிருந்தது.
எனினும் அந்த திணைக்களத்திற்கு இவ்வாறான அதிகாரம் உள்ளதா என்பது குறித்து பிரச்சனை நிலவுவதாக அந்த நிறுவனத்தின் சட்டத்தரணி இன்று ஆணைக்குழுவில் தெரிவித்திருந்தார்.
எனினும் அதன் பின்னர் அந்த கையடக்க தொலைபேசி ஆணைக்குழுவில் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.