மீண்டும் உயர் நீதிமன்றம் செல்ல கூட்டு எதிர்கட்சி தயாராகிறது.

347 0

9125_content_Bandula_Gunawardenaஅரசாங்கத்தினால், அண்மையில் 16 அத்தியாவசிய பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்யபட்டமைக்கு எதிராக மீண்டும் உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது.
ஒன்றிணைந்த எதிர்கட்சியினால் கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட, நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்ன இதனை தெரிவித்தார்.
16 அத்தியாவசிய பொருட்களுக்கு நிர்ணய விலையை அரசாங்கம் அறிவித்தமையானது, நுகர்வேர் பாதுகாப்பு சட்டத்தை முழுமையாக மீறும் செயற்பாடாகும்.
இதனூடாக, வர்த்தகர்கள் மற்றும் வியாபாரங்கள் என்பவற்றின் மத்தியில்  தளம்பல் நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிராக இந்த வாரத்திற்குள் உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய எதிர்பார்த்துள்ளதாக பந்துல குணவர்த்ன தெரிவித்தார்