பிணை வழங்கப்பட்டும் விளக்கமறியலில் தயா மாஸ்டர்

369 0

160810111117_dayamaster_512x288__nocreditதமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் ஊடக இணைப்பாளரான தயா மாஸ்டர் எனப்படும் வேலாயுதம் தயாநிதிக்கு, நிபந்தனையுடன் கூடிய பிணையில் செல்ல,  வவுனியா மேல் நீதிமன்றம் இன்று அனுமதித்துள்ளது.
ஐந்து லட்சம் ரூபா ரொக்கப்பிணையுடன், தலா ஒரு லட்சம் ரூபா பெறுமதியான நான்கு அரச ஊழியர்களின் சரீரப் பிணையில் செல்ல, அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
எனினும், நான்கு சரீரப் பிணையாளர்களை நீதிமன்றம் பார்வையிட வேண்டும் என தெரிவித்து, அவர்களை நாளை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்ட நீதிபதி, அதுவரையில் தயா மாஸ்டரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.
கடந்த 2009ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் பிரதேசத்தில் இருந்த பொதுமக்களை, மனித கேடயமாகப் பயன்படுத்தியதாக தயா மாஸ்டர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
எனினும், தயா மாஸ்டர் முன்னதாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையை  கவனத்திற் கொண்டு, அவரை நிபந்தனையுடன் பிணையில் செல்ல அனுமதிப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது.
இந்தநிலையில், இந்த வழக்கு விசாரணை செய்யப்படும் வரையில் வடமாகாணத்தை விட்டு செல்லக்கூடாது.
ஒவ்வொரு நாளும் யாழ்ப்பாண காவல் நிலையத்தில் முற்பகல் 9 மணிக்கும் பகல் 12 மணிக்கும் இடையில் கையெழுத்திட வேண்டும் என்றும் வவுனியா மேல் நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.