பசிலின் காணிகள் அரசுடமையாக்கப்பட்டன.

361 0

82498103_470688504சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிலையத்திற்கு சட்டவிரோதமாக முதலீடு செய்யப்பட்ட 157.5 மில்லியன் ரூபா நிதியை, இலங்கை மத்திய வங்கியில் வைப்பிலிட, கடுவளை நீதவான் நீதிமன்றம் இன்று அனுமதியளித்துள்ளது.
அமைச்சரவை ஊடக பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
அத்துடன், முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஸவுக்கு சொந்தமானது என கூறப்படும் கடுவளை மற்றும் மாத்தறை பிரவுன்ஸில் உள்ள காணி ஆகியவற்றையும் அரசுடமையாக்கவும் நீதவான் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக, அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.
இதன்படி, கடுவளையில் உள்ள காணியை காவல்துறை பயிற்சி மத்திய நிலையமாகவும் மாத்தறையில் உள்ள காணியை சுற்றுலா பயிற்சி மத்திய நிலையம் ஒன்றை அமைக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.