மருத்துவமனைகளில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
சிறப்பு மருத்துவர் ப்ரசிலா சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களுடன் ஒப்பிடும் போது தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தால் குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்சியாக மேற்கொள்ளப்படும் டெங்கு ஒழிப்பு செயற்திட்டமே இதற்கான காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை டெங்கு நோய் தொற்று காரணமாக ஒரு லட்சத்து 19 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 327 பேர் மரணித்துள்ளனர்.