மன்னார் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் ஒலிவாங்கிகள் செயலிழந்திருந்ததால் தமது கருத்துக்களைத் தெரிவிக்க முடியாது அதிகாரிகள் திண்டாடினர்.
மன்னார் நகர பிரதேச செயலாளர் என்.பரமதாஸனின் நெறிப்படுத்தலில், இணைத்தலைவர்களான அமைச்சர் றிஸாட் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், சாள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரின் தலைமையில் இன்று காலை மன்னார் பிரதேச செயலகத்தில் கூட்டம் இடம்பெற்றது.
கூட்டத்துக்காக மண்டபத்தில் பயன்படுத்தப்பட்ட ஒலிவாங்கிகள் உரிய முறையில் செயற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதனால் உரையாற்றியவர்களின் கருத்துக்களை உரிய முறையில் கேட்க முடியாத நிலை ஏற்பட்டது.
கூட்டத்துக்கு அழைக்கப்பட்ட திணைக்களத் தலைவர்களில் முக்கியமான துறைகளைச் சேர்ந்த திணைக்கள அதிகாரிகள் வரவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.