புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் சந்தேகநபர்கள் இன்று பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டனர்.
சந்தேகநபர்களுக்கு சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோத்தர்களுக்கு மேலதிகமாக சிறைச்சாலை சிறப்புப் பாதுகாப்புப் பிரிவும் பாதுகாப்பு வழங்கியது.
அதேவேளை, வித்தியா படுகொலை வழக்கின் 9 எதிரிகளுக்குமான பாதுகாப்பில் சிறப்புக் கவனம் செலுத்துமாறு யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற தீர்ப்பாயம் நேற்று அறிவுறுத்தியிருந்தது.
வழக்குத் தொடுநர் தரப்புச் சாட்சியங்கள் நிறைவடைந்துள்ளது.
அதையடுத்தே வழக்கின் எதிரிகளுக்குமான பாதுகாப்பில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பாயம் பணித்தது.
‘எதிரிகளுக்கான குடிதண்ணீர், உணவு உள்ளிட்டவை சிறைச்சாலையால் மட்டுமே வழங்கப்பட வேண்டும்.
நீதிமன்ற வளாகத்துக்குள் எதிரிகளை எந்தவொரு நபரும் சந்திக்க அனுமதிக்கக் கூடாது.
எதிரிகளை அவர்களது உறவினர்கள் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் மட்டுமே சந்திக்க முடியும்’ என யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு தீர்ப்பாயம் அறிவுறுத்தியிருந்தது.