இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளின் நிமித்தம், முதல் கட்டமாக, 27 பாடசாலைகள் பயன்படுத்தப்படவுள்ளன.
இதற்கமைய, செப்டம்பர் 7ம் திகதி முதல் 20ம் திகதி வரை இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதன்பொருட்டு ஐந்து பாடசாலைகள் முழுமையாகவும், 22 பாடசாலைகள் பகுதியளவிலும் பயன்படுத்தப்படவுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, முழுமையாக பயன்படுத்தப்படவுள்ள பாடசாலைகள் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக, செப்டம்பர் 21ம் திகதி திறக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பகுதியளவில் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் செப்டம்பர் 6ம் திகதியே மீளத் திறக்கப்பட்டு விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, முழுமையாக மூடப்படும் பாடசாலைகள் ஐந்தும் கீழ் வருமாறு,
01) கொழும்பு ராஜகீய வித்தியாலயம்
02) கண்டி கிங்ஸ்வுட் வித்தியாலயம்
03) கண்டி விஹாரமாகா தேவி மகளிர் பாடசாலை
04) கண்டி ஸ்வர்ணமாலி மகளிர் பாடசாலை
05) கண்டி சீதா தேவி மகளிர் பாடசாலை