கொழும்பில் சேரும் குப்பைகளை முத்துராஜவல பகுதியிலுள்ள காணியொன்றில் கொட்ட விதிக்கப்பட்டிருந்த தடை, உயர்நீதிமன்றத்தால் நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணைகளை செப்டம்பர் 21ம் திகதிக்கு ஒத்திவைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முத்துராஜவல பகுதியில் வசிக்கும் 37 பேர் இணைந்து இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.