மொனார்க் ரெசிடன்ஸி மனைக்குடியிருப்பில்தான் தற்போதும் வசிக்கின்றோம். ஆனால் எனது மனைவி, குறித்த குடியிருப்பு தொடர்பில் யாருடன் ஒப்பந்தம் செய்தார் என்றோ, எவ்வளவுக்கு ஒப்பந்தம் நடந்ததென்றோ எனக்கு தெரியாது. அதுமட்டுமல்லாது எனது வீடு 4000 சதுர பரப்பளவு என ஆணைக்குழுவில் தெரிவிக்கின்றார்கள். ஆனால் எனது வீட்டின் உண்மையான பரப்பளவு 2000 சதுர பரப்பளவு மட்டுமே யாகும் என்று அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆணைக்குழுவில் சாட்சியமளித்தார்.
எனது மனைவியும்,மகளும் ஒன்பது கம்பனிகளுக்கு பணிப்பாளராக செயற்படுகின்றனர். அவர்களுக்கு என்னை நம்பியிருக்க வேண்டிய அவசியமில்லை. அதனால்தான் குறித்த மனைத் தொகுதியின் ஒப்பந்தம் தொடர்பில் என் மனைவியிடம் கேட்கவில்லை எனவும் நேர்மையாகவும் பொறுப்புடனுமே அவர் செயற்பட்டு வருவதாகவும் கூறினார்.
பிணைமுறி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை நேற்றுக் காலை 10 மணிக்கு ஆரம்பமானது. அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் சாட்சிப்பதிவுகளோடு விசாரணை ஆரம்பமாகியது. சுமார் 4 மணித்தியாலங்கள் அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.
பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை களை செய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்களான உயர் நீதிமன்ற நீதியரசர் கே.டீ. சித்திரசிறி, பி.எஸ் ஜெயவர்தன மற்றும் ஓய்வு பெற்ற பிரதி கணக்காய்வாளர் நாயகம் வேலுப்பிள்ளை கந்தசாமி ஆகியோர் முன்னிலையில் இந்த விசாரணைகள் இடம்பெற்றன.
கொழும்பு – புதுக்கடையில் உள்ள நீதியமைச் சின் கட்டட தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேற்படி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அறையில் இந்த விசாரணைகளை ஆரம்பித்து முதலில் மேலதிக சொலிசிட்டர் டப்புல லிவேரர் நெறிப்படுத்தலுடன் சாட்சி விசாரணைகள் ஆரம்பமாகின.
கேள்வி : உங்களது பெயர் என்ன?
பதில் : ரவி கருணாநாயக்க
கேள்வி: வயது என்ன?
பதில்: 54
கேள்வி: மதம்?
பதில்: கத்தோலிக்க கிறிஸ்தவம்
கேள்வி: உங்களது கல்வி தகைமை, தொழில் என்ன?
பதில்: கணக்காய்வு பட்டயக்கல்வியை முடித்துள்ளேன். தற்போது முழுநேர அரசியல்வாதியாகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் தற்போது உள்ளேன்.
இந்நேரத்தில் நான் ஒன்றை கூற விரு ம்புகின்றேன். தொழில் காரணங்களுக்காக என்னால் இரண்டு முறை ஆணைக்குழுவு க்கு வர முடியாமல் போய்விட்டது. இதற்காக நான் மன்னிப்பை கேட்டுகொள்கின் றேன்.
கேள்வி: தற்போது எங்கு வசிக்கின்றீர் கள்?
பதில்: 5 பி. எச்2 மொனார்க் ரெசிடன்ஸி மனைத்தொகுதியில் ஐந்தாம் மாடியில் வசி த்து வருகின்றோம்.
கேள்வி: உங்களது மனைவி பெயர் என்ன?
பதில்: மேலா கருணாநாயக்க
கேள்வி: உங்களுக்கு எத்தனை பிள்ளை கள் உள்ளனர் அவர்களின் பெயர் என்ன?
பதில்: மூன்று பெண் பிள்ளைகள், ஒனேலா கருணாநாயக்க, செனேலா கரு ணாநாயக்க, மினேலா கருணாநாயக்க.
கேள்வி: எப்போதிலிருந்து மொனார்க் ரெசிடன்ஸி மனைத்தொகுதியில் வசிக்கின்றீர்கள்?
பதில்: 2016 பெப்ரவரி நடுப்பகுதியிலி ருந்து
கேள்வி: தற்போது நீங்கள் வசிப்பது நிரந்தர முகவரியா அல்லது தற்காலிக முகவரியா?
பதில்: நிரந்தர முகவரி தான்.
கேள்வி: உங்களது அரசியல் அனுபவம் பற்றி கூறுங்கள்?
பதில்: 5 முறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன். 25 வருடங்களுக்கு மேலாக அரசியலில் இருக்கின்றேன். பல் வேறு அமைச்சு பொறுப்புக்களிலும் இருந்துள்ளேன்.
கேள்வி: நல்லாட்சி அரசாங்கம் எனும் பெயருடைய அரசாங்கம் எப்போது ஆட்சியமைத்தது?
பதில்: 2015 ஜனவரி எட்டாம் திகதி
கேள்வி: நிதியமைச்சராக எப்போது பொறுப்பேற்று கொண்டீர்கள்?
பதில்: 2017 ஜனவரி 27 ஆம் திகதி
கேள்வி: நிதியமைச்சர் என்ற வகையில் எங்களது கடமை பொறுப்புக்கள் என்ன என நினைக்கின்றீர்கள்?
பதில்: நாங்கள் ஆட்சியமைக்கும் போது இலங்கையில் அதிகமான கடன்சுமை இருந்தது. இதனைப் போக்க முக்கியமான பதவியில் நான் அமர்த்தப்பட்டேன். இந்நாட்டு அபிவிருத்திக்காகவும் ஊழலற்ற கடனற்ற நாட்டை உருவாக்க தேவையானதை செய்வதே எனது கடமையாகும்.
கேள்வி: மத்திய வங்கியுடன் அல்லது முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுடன் எவ்வாறான தொடர்பை பேணி வந்துள்ளீர்கள்?
பதில்: நான் ஒரு நிதியமைச்சர். அவர் மத்திய வங்கியின் ஆளுநர். அந்த ஒரு தொடர்பே எங்களிடம் காணப்பட்டது.
கேள்வி: மத்திய வங்கியில் நிதியியல் மற்றும் கடன்படு துறைகள் பிரதானமானவை. நிதியமைச்சர் என்ற வகையில் நீங் கள் எந்த தொடர்பை பேணி வந்தீர்கள்?
பதில்: நிதியமைச்சர் நிச்சயமாக நிதியியல் கொள்கைகளில் மட்டுமே தலையிட முடி யும் கடன்படு துறை எனது அமைச்சுக்கு அப்பாற்பட்டது. அதேவேளை அது மத்திய வங்கியின் தனித்த எல்லைக்குட்பட்டது.
கேள்வி: திறைசேரியுடன் நீங்கள் கொண்டுள்ள தொடர்பு எவ்வாறானது.
பதில்: திறைசேரியில் 14 தொடக்கம் 15 திணைக்களங்கள் எனது அமைச்சின் கட்டு பாட்டுக்குள் இருந்தது. அதனால் அந்த தொடர்பு மிகவும் நெருக்கமானது என கூற லாம். பொதுவாக நிதியமைச்சு என்பது கூட்டுப்பொறுப்புடன் கூடிய பல துறைகள் இணைந்து செயற்படும் அமைப்பாகும்.
கேள்வி: நீங்கள் நிதியமைச்சராக பதவி வகித்த போது வரவு – செலவுத் திட்டத்தை முன்வைத்துள்ளீர்களா?
பதில்: ஆம் இரண்டு முறை சமர்ப்பித்துள் ளேன். அத்தோடு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு 100 நாள் வேலைத்திட்டத்தின் கணக்கறிக்கைகளும் என்னால் தயாரிக்கப்பட்டன.
கேள்வி: அர்ஜுன் அலோசியஸுடன் நீங் கள் கொண்டுள்ள தொடர்பு எவ்வாறானது?
பதில்: எனது பெற்றோர், தாத்தா காலப்பகுதியிலிருந்தே மகேந்திரன் குடும்பத்தை எங்களுக்கு தெரியும். அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அவர்களது குடும்பத்துடன் தொடர்பு இருந்தது.
கேள்வி: அர்ஜுன் அலோசியஸை எப் போதிலிருந்து உங்களுக்கு தெரியும்?
பதில்: அது எனக்கு ஞாபகமில்லை. ஆனால் எனக்கு 10 தொடக்கம் 15 வயதிலிருந்தே அவரது குடும்பத்தை தெரியும்.
கேள்வி: அர்ஜுன் அலோசியசுடன் தனிப்பட்ட தொடர்பு கொண்டிருந்தீர்களா?
பதில்: இல்லை
கேள்வி: அர்ஜூன் அலோசியஸுடன் வர்த்தக அல்லது வியாபார தொடர்பு கொண்டிருந்தீர்களா?
பதில்: இல்லை
கேள்வி: அலுவலக அல்லது சட்ட தொட ர்பு கொண்டிருந்தீர்களா?
பதில்: இல்லை
கேள்வி: அப்படியென்றால் அர்ஜூன் அலோசியஸுடன் என்ன தொடர்புதான் உங்களுக்கு இருந்தது?
பதில்: அவருடனான தொடர்பை நெருக் கத்துக்குள் கொண்டு வரமுடியாது. பாதை யில் நடக்கும் போதும் வியாபாரம் மேற்கொள்ளும் போதும் எத்தனையோ பேரை பார்க்கின்றோம். ஆனால் அவர்களை குறி த்த வரையறைகளுக்குள் கொண்டு வரமுடியாது.
கேள்வி: நீங்கள் நிதியமைச்சராகப் பதவி வகிப்பதற்கு முன்னர் எத்தனை கம்பனிகளை தலைமை தாங்கினீர்கள்? அவை என்ன?
பதில்: ஒன்பது கம்பனிகளில் பதவி வகித் தேன். ஜி.டி.சி கம்பனி, ஜி.எப்.எம் கம்பனி, குளோபல் ஸ்டார்ஸ் ட்ரவல்ஸ் கம்பனி, ஆர்.பி.எப்.சி கம்பனி, வெக்லூம் பிரைவட் லிமிடட் உள்ளிட்ட கம்பனிகள்
கேள்வி: பங்குச்சந்தையில் குறித்த கம்பனிகளின் சார்பில் முதலிட்டுள்ளீர்களா?
பதில்: ஆம் 20 தொடக்கம் 30 சதவீதம் வரையில் பங்குகளை நாம் முதலிடுகின் றோம்.
கேள்வி: நாம் என்றால் யாரை சொல்கின்றீர்கள்?
பதில்: எனது குடும்பத்தை (மனைவி, மகள்)
கேள்வி: ஏதேனுமொரு கம்பனிக்கு வெளிநாட்டு கம்பனியொன்றினூடாக ஆலோசனை அல்லது பங்குதாரர்கள் உள்ளனரா?
பதில்: ஆம். குளோபல் லொஜிஸ்டிக் வோர்க்ஸ் கம்பனி
கேள்வி: நீங்கள் நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் அந்த கம்பனிகளை யார் பொறுப்பேற்றார்?
பதில்: எனது மனைவி மேலா கருணாநாயக்க மற்றும் எனது மகள் ஒனேலா கருணாநாயக்க ஆகியோர்
கேள்வி: குளோபல் லொஜிஸ்டிக் டிரான்ஸ் பெரன்சி கம்பனியின் பணிப்பாளர் உங்களது மனைவி மட்டுமா?
பதில்: இல்லை பிரித்தானிய பிரஜையாகிய லக்ஸ்மி காந்தன் மற்றும் அவரது மகன் லக்ஸ்மி சங்கர்
கேள்வி: லக்ஸ்மி காந்தன் எங்கு பிறந்தவர்?
பதில்: இந்தியாவில் ஆனால் தற்போது பிரித்தானிய குடியுரிமையை பெற்றுள்ளனர்.
கேள்வி: ஓ.எஸ்.எம் கம்பனியின் விரிவாக்கம் என்ன?
பதில்: ஒனேலா, செனேலா, மெனேலா
கேள்வி: அந்த கம்பனி பணிப்பாளர் யார்?
பதில்: எனது மனைவி
கேள்வி: அர்ஜுன் அலோசியஸை அடிக்கடி சந்திப்பீர்களா?
பதில்: ஆம்
கேள்வி: வீட்டுக்கு வருவாரா?
பதில்: ஞாபகம் இல்லை. ஆனால் சந்தித்துள்ளோம்.
கேள்வி: நீங்கள் நிதியமைச்சராக இருந்தபோது நிதியமைச்சுக்கு வந்துள்ளாரா?
பதில்: ஆம் இரண்டு முறைகள் வந்துள் ளார்.
கேள்வி: அப்போது வியாபார நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடியது ண்டா?
பதில்: ஒருபோதும் இல்லை
அர்ஜுன் அலோசியஸின் தொலைபேசி அழைப்புக்கள் மீதான விசாரணை
மத்திய வங்கி முறி விசாரணை முறி விசா ரணை தொடர்பில் பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜுன் அலோசியஸின் தொலைபேசி, மடிக்கணினி உள்ளிட்ட அனைத்து தொடர்பாடல் கருவிகளையும் மத்திய புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி ஆணைக்குழு உத்தரவு பிறப்பித்திருந்தது.
2015 ஆம் ஆண்டு தொடக்கம் பிணை முறி விசாரணைகள் முடியும் வரையான காலப்பகுதி முழுவதும் பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜுன் அலோசியஸின் மேற்கொண்ட அனைத்து வகையான தொடர்பாடல் விடயங்களை யும் பரிசோதிக்கப்பட்டது.
இதன்படி அவரது அழைப்புக்களில் சுமார் 18000 க்கும் மேற்பட்ட அழைப்புக் கள் மற்றும் குறும்பதிவுகள் பதிவுசெய்யப்பட்டிருந்தன. பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜுன் அலோசியஸின் தொலைபெசி இலக்கமான 07777 77723 எனும் இலக்கத்திலிருந்து அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் தொடர்புபட்ட அழைப்புக்கள் கேள்விக்குட்படுத்தப் பட்டன.
94766058862 எனும் இலக்கத்திலிருந்து நெய்ல் டி. சில்வா அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் தொடர்பை பேணுங்கள் என்றும் கணக்காய்வு அறிக்கைகளை காண்பிக்க கூறியும் கூறப்பட்டுள்ளது பற்றி உங்களுக்கு தெரியுமா?
பதில்: தெரியாது. இந்த செய்தியை இப்போதுதான் பார்க்கின்றேன்.
கேள்வி: இது தொடர்பில் பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜுன் அலோசியஸின் உங்களுடன் கலந்துரையாடியுள்ளார்?
பதில்: இல்லை.
கேள்வி: 940714366650 எனும் இலக்கத்திலிருந்து பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜுன் அலோசியஸ் அனுப்பியுள்ள குறுந்தகவலில் தயவுசெய்து இது தொடர்பில் ஆர்.கேவுக்கு தெரியயப்படுத்துங்கள் என்றும் மூன்று மில்லியன் ரூபா பெறுமதியான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் கூறப்பட்டுள்ளது. இது தொடர் பில் ஏதேனும் தெரியுமா?
பதில்: தெரியாது
கேள்வி: இந்த குற்ற தகவலின்படி ஆர்.கே என்பது யார்?
பதில்: யாரென எனக்கு தெரியாது
கேள்வி: உங்களை யாரேனும் ஆர்.கே என அழைப்பார்களா?
பதில்: இல்லை. ரவி என்பார்கள் கரு என்பார்கள் இப்படி யாரும் என்னை அழைப்பதில்லை.
கேள்வி: பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத் தின் பங்குகள் அல்லது உடைமை சன்டே லீடர் பத்திரிகை நிறுவனத்துடன் தொடர்புபட்டுள்ளதை அறிவீர்களா?
பதில்: இது தொடர்பில் எனக்கு தெரியாது. இதுதான் அது தொடர்பில் முதலாவதாக கேள்விப்படுகின்றேன்.
கேள்வி: 9440716527114 எனும் இலக்கத்திலிருந்து ஸடீவ்ஸ் சைமன் என்பவர் அனுப்பியுள்ள குறுந்தகவலில் கேள்விமனுப்பத்திரத்தை ஒப்படையுங்கள் எனவும் இது தொடர்பில் ஆர்.கருணாநாயக்க விடம் கூறுங்கள் எனவும் நடவடிக்கைகள் எடுங் கள் எனவும் கூறப்பட்டுள்ளதே. அதன்படி ஆர். கருணாநாயக்க என்பது யார்?
பதில்: தெரியாது. இந்த தகவலுக்கும் எனக்கும் தொடர்பு கிடையாது.
கேள்வி: 9440716527114 எனும் இலக்கத்திலிருந்து ஸடீவ்ஸ் சைமன் என்பவர் அனுப்பியுள்ள குறுந்தகவலில் பி.எம் அமெரிக்க திறைசேறியுடன் கதைக்க சொன்னார். என்றும் ஆர்.கருணாநாயக்கவுடன் தொட ர்பை பேணுங்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் பி.எம் என்பது யார்?
பதில்: தெரியவில்லை.
கேள்வி: இந்த குறுந் தகவல்களில் பி.எம் என்பது பிரதமரையும் ஆர்.கே. என்பது ரவி கருணாநாயக்க என்பதும் எங்களுக்கு தெரியாதா?
பதில்: நிச்சயமாக இந்த தகவல்களை என் னுடன் தொடர்புபடுத்துவது முறையா காது.
கேள்வி: அடுத்ததாக சமூக வலைத்தளங் கள் இந்த விடயத்தை பெரிதாக்குகின்றன. தயவு செய்து இது தொடர்பில் கேளிக்கை கட்டுரையொன்றை பத்திரிகைக்கு வழங்குங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது தொட ர்பில் ஏதேனும் தெரியுமா?
பதில்: தெரியாது.
கேள்வி: அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் கடவுச்சீட்டு தொடர்பான விசாரணை
பதில்: 09 ஆம் திகதி ஜூன் மாதம் 2015 ஆம் ஆண்டிலிருந்து 2015 நவம்பர் 15 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் 30 வெளிநாட்டு பயணங்கள், கலந்துரையாடல்கள் தொடர்பில் ஆராய்வுக்குட்படுத்தப் பட்டது.
கேள்வி: அர்ஜுன் அலோசியஸை சிங்கப்பூரில் எப்போதாவது சந்தித்ததுண்டா?
பதில்: ஞாபகம் இல்லை
கேள்வி: 21 டிசம்பர் 2016 அன்றிலிருந்து 26 டிசம்பர் 2016 வரையிலும் நீங்கள் சிங்கப்பூரில் இருந்துள்ளீர்கள். இதன்போது அர்ஜுன் அலோசியஸும் சிங்கப்புரில் இருந்துள்ளார். இதன்போது நீங்கள் அல்லது உங்களது குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் அவரை சந்தித்ததுண்டா?
பதில்: இல்லை
கேள்வி: சிங்கப்பூருக்கு எதற்காக அடிக்கடி விஜயம் மேற்கொண்டுள்ளீர்கள்?
பதில்: இவை அனைத்தும் எனது உத்தியோகபூர்வமான பயணங்கள் இதில் எவ்விதமான ஒளிவு மறைவுகளும் இல்லை.
மொனார்க் ரெசிடன்ஸி தொடர்மாடி குடியிருப்பு விற்பனை
கேள்வி: மொனார்க் ரெசிடன்சி மனையின் உரிமையாளரின் பெயர் என்ன?
பதில்: விஜேசூரிய
கேள்வி: அனூக விஜேசூரியவுக்கு எத் தனை சகோதரர்கள் உள்ளனர்?
பதில்: இரண்டு பேர். நிஹால் விஜேசூரிய மற்றும் விஜித விஜேசூரிய
கேள்வி: விஜித விஜேசூரியவுடன் குறித்த மனைகொள்வனவு தொடர்பில் பேச்சுவார்ததை நடத்தினீர்களா?
பதில்: இல்லை.
கேள்வி: அனூக விஜேசூரியவின் மகள் அனிகா அனூக விஜேசூரியவின் மகளை தெரியுமா?
பதில்: தெரியும் ஆனால் கதைத்ததில்லை.
கேள்வி: தற்போது இருக்கும் குடியிருப்பு 4000 சதுர அடியை கொண்டதா?
பதில்: இல்லை. 2000 சதுர அடி மட்டுமே கொண்டது. இது மிகவும் பொய்யான கூற்றாகும். எனது வீட்டில் மூன்று படுக்கைய றைகளும் வரவேற்பறை மட்டுமே உள்ளது.
கேள்வி: அந்த வீட்டை வாங்கியது யார்?
பதில்: எனது மனைவி
கேள்வி: வீட்டு ஒப்பந்தத்தை நீங்கள் பார்த்தீர்களா?
பதில்: இல்லை. எனது மனைவியின் கம்பனியின் பணிப்பாளர்களினாலேயே இந்த வீடு வாங்கப்பட்டது.
கேள்வி: இவ்வீட்டை கொள்வனவு செய்வதற்கு எப்படி பணம் கிடைத்தது?
பதில்: அது எனது மனைவி மற்றும் மகள் ஆகியோர் அவர்களது கம்பனியின் பணிப்பாளர்களின் அனுமதியின் பேரில் கொள்வனவு செய்தார்கள்.
கேள்வி: அப்படியாயின் அவர்கள் யாரு டன் பேரம் பேசினார்கள் எவ்வளவுக்கு கொள்வனவு செய்தார்கள் என்பது தொடர் பில் உங்களுக்கு தெரியாதல்லவா?
பதில்: தெரியாது
கேள்வி: ஒரு நிதியமைச்சர் என்ற வகை யில் பணக்கூற்று தொடர்பான அனைத்து பொறுப்பிலும் உள்ள நீங்கள் ஆவணங்களை பார்வையிடவில்லை என்பதுவும் இது தொடர்பில் ஏற்படுத்தப்பட்ட நிதி கொடுக் கல் வாங்கல்கள் தெரியாது என கூறுவது வேடிக்கையாக உள்ளதே?
பதில்: அப்படியில்லை. நான் நிதியமைச் சராக காலையில் 7 மணிக்கு அமைச்சுக்கு: சென்று 10 மணிக்கு தான் வீடு திரும்புவேன். இதனை குறிப்புகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாது எனது மனைவி மற்றும் மகள் என்போர் சிறப்பாக வியாபாரத்தை கவனித்து வரு கின்றனர். அவர்களுக்கு முடிவு எடுக்க முடியும்.
கேள்வி: இது தொடர்பில் உங்களது மனைவி எதுவும் உங்களிடம் கலந்துரை யாடிய தில்லையா?
பதில்: இல்லை.
கேள்வி: நீங்கள் உண்மையில் கூட்டுக் குடும்பத்துடன்தானே வாழ்கின்றீர்கள்?
பதில்: ஆம்
மொனார்க் ரெசிடென்ஸி மனைத் தொகுதியை கொள்வனவு செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட 155 மில்லியன் நிதி தொடர்பில் உங்களது மனைவியின் கம்பனி யின் வரவிலோ அல்லது செலவிலோ பதி விடப்படவில்லையே
அது பற்றி எனக்கு தெரியாது. அதை என் மனைவியிடம் தான் கேட்க வேண்டும்.