தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முசம்மில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்றைய தினம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த பிணை வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி 25 ஆயிரம் ரூபா ரொக்க பிணையிலும், 10 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளிலும் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.