வவுனியாவில் 30 வருடங்களாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த சாலை மக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டது.
வவுனியா தெற்கிலுப்பைக்குளம் மற்றும் மாமடுசந்தியை இணைக்கும் ஔவையார் சாலையே நேற்றுமுன்தினம் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த சாலையைச் சீரமைக்க வவுனியா பிரதேசசெயலகம் 4 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கியுள்ளது. வவுனியா நகர சபையினரின் அனுமதியுடனும் மக்களின் பங்களிப்புடனும் குறித்த சாலை திறக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சாலை ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலையில் பாடசாலை மாணவர்கள் சுமார் இரண்டு கிலோமீற்றர் சுற்றிச் செல்லவேண்டிய நிலமை காணப்பட்டது.
சடலங்களைச் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்வதில் தெற்கு இலுப்பைக் குளம் மற்றும் கோவில்குளம் கிராம மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர் என்று மக்கள் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் குறித்த சாலை திறந்து வைக்கப்பட்டது.