யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு பகுதியைச் சேர்ந்த 13 இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறைப் பொலிஸாரின் ஜூப் வண்டி மீது கற்களால் தாக்குதல் நடத்தியமை நெல்லியடியில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியமை பருத்தித்துறை வீதியில் ரயர்களை கொழுத்தி வன்முறையில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டிலே குறித்த இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
குறித்த இளைஞர்களில் இருவர் நெல்லியடியில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதுடன் 11 இளைஞர்கள் பருத்தித்துறைப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க கொழும்பிலிருந்து விசேட பொலிஸ் குழு ஒன்று பொலிஸ் மா அதிபரினால் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்தே விசேட அதிரடிப்படையினர் மற்றும் கலகம் அடக்கும் பொலிஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.